Pagetamil
இலங்கை

பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் – சந்திரகுமார்

நாட்டுக்கும், மக்களுக்குமான பொருத்தமான அரசியலை தீர்மானிக்கி்ன்ற
சக்தியான இளைஞர்கள் மாற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்
கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி திருவைாறு கிராமத்தில் இடம்பெற்ற இளைஞர்களுடான சந்திப்பின்
போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர்கள் மத்தியில்
ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது.புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி
அவர்கள் சிந்திக்கவும், செயற்படவும் தொடங்கியிருகின்றார்கள் கடந்த 15
அவர்கள் பயணித்த அரசியல் பாதையில் இருந்து விலகி பொருத்தமான அரசியல்
வழியை பின்பற்ற தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இந்த இளைஞர்கள்
தாங்கள் நம்பி பயணித்த அரசியல் தலைமைகள் அவர்கள் நட்டாற்றில் விட்டது போல
விட்டுச் சென்றுள்னர். இளைஞர்கள் எதிர்பார்த்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரித்து பதவிகளுக்கு வந்தவர்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஏற்பட்ட கோபமும் விரக்தியும்தான் மாவட்டத்தின் இளைஞர்கள் எங்களின் அரசியல் வழியை ஏற்றுக்கொண்டு பயணிக்க முன்வந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றத்தின் பின்னர் ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் நிமித்தமே இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி செயற்பட காரணமாக அமைந்துள்ளதனை அவர்களின் கருத்துக்களில் இருந்து அறிந்துகொண்டேன். ஆகவேதான் நான் இம்முறை அதிகாரத்திற்கு வந்தவுடன் இளம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிச்சயம் நிறைவேற்றுவேன். வெறும் வார்த்தைகளாலும், அறிக்கைகளாலும், உணர்ச்சி பேச்சுக்களாலும் அரசியல் செய்பவன் நானல்ல என்பதனை இளைஞர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர்.

எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களுக்கான
அபிவிருத்திகளையும் மேற்கொள்ள உழைப்பேன் என்பதனையும் நான் உத்தரவாதமாக
கூறுகின்றேன் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

பலுகஸ்வெவவில் சிசுவை கொலை செய்த தாய் கைது

east tamil

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

Pagetamil

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

Leave a Comment