Pagetamil
மலையகம்

கூரையை சீர் செய்தவர் தவறி விழுந்து பலி

நேற்று (03) பிற்பகல் பசறை மத்திகஹதென்ன விவசாய சேவை அலுவலகத்தின் மேற்கூரையை சீர் செய்து கொண்டிருந்த ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 02, தவலம்பலாஸ்ஸ, வெபெத்த என்ற இடத்தில் வசிக்கும் 34 வயதுடைய டி.தேவேந்திர ராஜ் என்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், பிற்பகல் 2 மணியளவில் அலுவலகத்தின் மேற்கூரையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதன்படி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment