100 அடி மரத்திலிருந்து விழுந்து பலி

Date:

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிய நபர் ஒருவர் மரத்தில் இருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதே தோட்டத்தைச் சேர்ந்த ந.கனகேஸ்வரன் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

இறந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள கந்திஸ் மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்தார்.

குளவிகள் தாக்கிய போது மரத்தில் இருந்த நபர் பயம் காரணமாக மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குளவி தாக்குதலுக்கு இலக்கான மற்றைய நபர் லிதுலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மரத்திலிருந்து வீழ்ந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு – 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும்...

மயிலத்தமடு – மாதவனை விவகாரம்: நவம்பர் 2இல் மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் நீண்டகாலமாக தொடர்ந்து இடம்பெற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்