25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

பிம்ஷானியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன: தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சமூகப் பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிம்ஷானி ஜசிங்கராச்சியை நியமிப்பது தொடர்பில் பரிசீலிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சமூக பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக தன்னை மீண்டும் நியமிக்க உத்தரவிடுமாறு கோரி பிம்ஷானி ஜசிங்கஆராச்சி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜசிங்கஆராச்சி தனது மனுவில், ஐக்கிய நாடுகளின் கடமைகளுக்காக நாட்டை விட்டுச் செல்வதற்கு முன்னர், அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாடு திரும்பியதும் அந்த பிரிவின் தற்காலிக டிஐஜி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

எஸ்.துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் மற்றும் பிரதிவாதிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த உச்சநீதிமன்றம், அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் தெரிகிறது என்று உறுதி செய்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment