27 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ENG vs SL | 10 வருடங்களின் பின் இலங்கைக்கு கிடைத்த டெஸ்ட் வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார். அவர் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக ஒலி போப் 154 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணிசார்பாக மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 263 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் தனஞ்ஜெய டி சில்வா 69 ஓட்டங்களை பெற்றார்.

2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்மித் 67 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும், விஸ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

10 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் 10 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். இதேவேளை, இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி பெற்ற 4வது டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

Leave a Comment