பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து, கண்டியில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு அவர் ஜனாதிபதி வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வந்த கீதா குமாரசிங்க, தற்போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராகவும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மகளிர் மன்றத்திலும் அங்கம் வகிக்கிறார்.




