டப்ளினில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து இலங்கையை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இரண்டு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், அயர்லாந்து மகளிர் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை பெற்றது.
18 வயதான விஷ்மி குணரத்ன தனது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் சதத்தை பெற்றார்.
விஷ்மி குணரத்ன அதிகபட்சமாக 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
இதுவரை இலங்கை மகளிர் அணிக்காக சமரி அத்தபத்து மாத்திரமே சதங்களை பெற்றுக் கொண்டுத்திருந்தார்.
இந்நிலையில், சமரிக்கு அடுத்ததாக இலங்கை மகளிர் அணிக்காக சதமடித்த இரண்டாவது பெண் என்ற சாதனையை விஷ்மி படைத்துள்ளார்.
மேலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் அடித்த இளம் இலங்கை வீராங்கனை என்ற சாதனையையும் விஷ்மி படைத்துள்ளார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களை பெற்று, 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
அயர்லாந்தின் பிரெண்டர்காஸ்ட் ஆட்மிழக்காமல் 122 ஓட்டங்களை பெற்றார்.




