தோட்ட அதிகாரிகள் பாடசாலை மாணவர் மீது தாக்குதல்: உரிய நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் ரூபன் பெருமாள்!

Date:

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல் நடாத்தியமையானது கண்டிக்கத்தக்க செயலாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த தோட்டத்தின் இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததையடுத்து, குறித்த பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களுடன் கலந்துரையாடியதுடன் இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த தோட்ட உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி தோட்ட அதிகாரிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நிவிதிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததுடன், நிவித்திகல பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளான மாணவனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் ரூபன் பெருமாள் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்