மைத்திரி குழுவின் தடை நீடிப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன  உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட 9 தடை உத்தரவுகளை ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கி, வேறு நபர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர் மூன்று வழக்குகளை பரிசீலித்ததன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த தடை உத்தரவை பிறப்பித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரதி துஷ்மந்த, பைசர் முஸ்தபா மற்றும் சரத் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சேபனைகளை zக்டோபர் 9ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்