26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

இரா.சம்பந்தனுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மஹிந்த மற்றும் பொன்சேகா!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துள்ளார். மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் வெளியிட்டுள்ளார்.

 

குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர், நாங்கள் பல நாட்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த சோக இழப்பை போக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய இரா சம்பந்தன் (R. Sampanthan) உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு (colombo) தனியார் வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.

இரா. சம்பந்தனின் மறைவிற்கு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா (Sarath Fonseka ) தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கல் செய்தியினை அவர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment