இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் நிலைமையையடுத்து, இலங்கையின் வடக்கு கடல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கை வருபவர்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக செய்தித் தொடர்பாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி வடக்கு கடல்களில் கடல் ரோந்துகளும் கடற்கரைகளில் தரை ரோந்துகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.
இருப்பினும், பல இந்தியர்கள் படகுகள் மூலம் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக தமக்கு தகவல் வந்துள்ளது என்றார்.




