தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 76 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டு அவை எண்ணப்படுகிறது. தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை, வாக்கு எண் ணிக்கை மையத்தின் இடவசதி ஆகியவை அடிப்படையில், மேஜைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை கதவின் சீலை உடைத்து அதிகாரிகள் திறக்கின்றனர்அந்த வகையில், 10 முதல் 28 மேஜை கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இதில் 14 மேஜைகள் 223 தொகுதிகளுக்கு அமைக் கப்பட்டுள்ளது. அதேபோல் பல்லாவரம், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அதிகபட்சமாக 43 சுற்றுக்கள் வரை நடத்தப்படுகிறது.
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது கொரோனா 2-ம் அலை உச்சத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்த வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.