இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (16) வவுனியாவில் நடைபெறவுள்ளது.
தூதரகங்களில் பணம் பெற்றுக்கொண்டு தம்மை சிவில் சமூகமென குறிப்பிடும் சில தனி நபர்களினாலும், அரசின் ஏற்பாட்டில் சில வர்த்தகர்களினாலும் முன்னெடுக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசம் தொடர்பிலும், இலங்கை தமிழ் அரசு கட்சி தொடர்புபட்ட வழக்குகள் குறித்தும் இன்றும் ஆராயப்படவுள்ளது.




