25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

கொரோனா நோயாளிகள் இறப்பதை பொறுக்க முடியாமல் மருத்துவர் தற்கொலை!

டெல்லியில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஒட்சிசன், படுக்கை வசதி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் கோர 2வது அலைக்கு பாதிப்பு அதிகமடைந்து வருகிறது. அங்கு உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒட்சிசன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் சொந்தமாக ஒட்சிசன் சிலிண்டரை கொண்டு வர வேண்டும் என சில மருத்துவமனைகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் விவேக் ராய் என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கடுமையான மன அழுத்ததில் இருந்த மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்துகொண்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுண்சில் முன்னாள் தலைவர் ரவி வாங்கர் டுவிட்டரில் கூறுகையில், உத்தரபிரதேசதின் கோரக்பூரை சேந்த சிறந்த மருத்துவர் விவேக் ராய். இந்த பெருந்தொற்று காலத்தில் அவர் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

இந்த வெறுப்புணர்வு நிறைந்த சூழ்நிலையில் விவேக் ராய் தனது கண்காணிப்பில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளை நினைத்து அந்த துன்பங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் வாழ்வதை விட தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொள்வது போன்ற கடினமான முடிவை எடுத்தார்’.

கொரோனா நெருக்கடியை நிர்வகிக்கும் போது மிகப்பெரிய உணர்ச்சிகரமான அழுத்தத்தை கவனத்திற்கு கொண்டுவருகிறது. தடுப்பாடுடைய மருத்துவ வசதிகளால் உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வால் நிர்வாக கட்டமைப்பு செய்த கொலை தான் இந்த இளம் மருத்துவரின் மரணம். மோசமான அறிவியல், மோசமான அரசியல், மோசமான நிர்வாகம்’ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment