மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரத்தினகிரியை சேர்ந்த பெரியசாமி திலிஷினா (18) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
இம்மாணவி உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக வீட்டில் கல்வி பயின்று வந்துள்ளதாகவும், நேற்று முன்தினமிரவு (18) வீட்டிலேயே படித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் படித்துக் கொண்டிருந்த மகள் காலையில் வீட்டில் இல்லை என அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



