முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று (17) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொண்டார்.
அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் முன்னாள் இராணுவ வீரர்களை கொண்ட குழுவான ரணவிரு பலகாய அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று காலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனத்தை பெற்றுக்கொண்டார்.




