யாழில் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்!

Date:

மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் நேற்று முன்தினம் (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபை வாசுதேவா பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு சூட்சுமமான முறையில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின், பெண்ணுறுப்புக்கு அண்மையாக தொடைப்பகுதியில் நகக் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளதாக மருதங்கேணிப் பொலிசாருக்கு அவர் அறிக்கையிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தீபாவளியன்று விபத்தில் சிக்கிய மனோ கணேசன்: மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக வழக்கு!

நவம்பர் 8 ஆம் திகதி தீபாவளித் திருநாளின் இரவு, நாடாளுமன்ற உறுப்பினரும்...

ஹிருணிகாவின் மேல்முறையீடு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

2015-ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற...

இலங்கை வந்த நடிகை பூஜா ஹெக்டே

இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, இலங்கைக்கான குறுகிய காலப் பயணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்