வாகரை காட்டுக்குள் கசிப்பு காய்ச்சியவர்கள் சிக்கினர்

Date:

மட்டக்களப்பு வாகரை பிரதேச காட்டுப் பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட 3 பேர்கள் நேற்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினால் இவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவக்கைக்காக வாகரை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து 270 லீற்றர் கசிப்பு வடி சாராயமும் 9 கோடா பரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கதிரவெளி அம்பந்தனாவெளி களப்பு பிரதேசத்தில் வைத்தே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

-க.ருத்திரன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கை சுதந்திரக் கட்சி இனி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல்...

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம்

மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதிக்க வேண்டாம்! பழைய தேர்தல் முறையை மீளக்...

திலீபன் நினைவுத்தூபியை அகற்றக் கோரிய பொலிஸாரின் கட்டளையைத் தூக்கி ஓரமாகப் போட்டேன் – யாழ் மாநகர முதல்வர் மதிவதனி அதிரடி!

தியாகி திலீபனின் நினைவுத்தூபியை அகற்றுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ் மாநகரசபைக்கு வழங்கப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்