24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
உலகம்

அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள ரிக்ரொக்

ரிக்ரொக் தளமும் அதை நிர்வகிக்கும் ByteDance நிறுவனமும் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கின்றன.

ரிக்ரொக் செயலியை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்நோக்க வேண்டும் என்ற சட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று இருதரப்பும் வாதாடுகின்றன.

ரிக்ரொக் செயலி தொடர்பான மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சென்ற மாதம் கையெழுத்திட்டார்.

அதன்படி ByteDance நிறுவனம் 9 மாதத்திற்குள் ரிக்ரொக் செயலியை விற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இல்லையெனில் தேசியப் பாதுகாப்பு அக்கறைகளால் அந்தச் செயலி நாட்டில் தடை செய்யப்படும் என்று மசோதா தெரிவித்தது.

சீனா அந்தச் செயலியை வைத்து அமெரிக்காவில் உள்ள 170 மில்லியன் பயனீட்டாளர்களை வேவு பார்க்கக்கூடும் என்ற கவலை எழுந்திருக்கிறது.

அமெரிக்கப் பயனீட்டாளர்களின் தரவுகளைப் பகிரவில்லை என்று ரிக்ரொக் தொடர்ந்து கூறிவருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

east tamil

Leave a Comment