நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Date:

தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர்
பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக
நாளாந்தம் அதிக நீரை சுத்திகரித்து வழங்க வேண்டிய நிலைமை தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களின் நீர் பாவனை தினமும் அதிகரித்துச் செல்கிறது அவ்வாறு
அதிகரித்துச் செல்லும் அளவுக்கு ஏற்ப சுத்திகரிக்கப்பட்ட நீரை
வழங்குவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி நீர்
சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு கொள்ளளவை விட அதிக நீர்
பாவைனயும் தேவையும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும்
தேவையான அளவு நீரை பொது மக்களுக்கு வழங்குவதில் நெருக்கடி நிலை
ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் இந் நிலைமையினை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக
பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனத் தெரிவித்துள்ள அவர்கள்
இந்நிலைமை தொடர்ந்தும் காணப்படுமாயின் வரும் நாட்களில் நீர் விநியோக
நடவடிக்கைகள் சுழற்சி முறையில் வழங்கும் நிலைமை ஏற்படும் என மேலும்
தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்