உயிரை மாய்த்த கள்ளக்காதல் ஜோடி

Date:

உடப்புஸ்ஸலாவ – மடுல்ல பாஹலகம பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருவரின் சடலங்கள் நேற்று (6) காலை மீட்கப்பட்டதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான டப்ளியூ.எம்.பிரியங்கனி (42) மற்றும் திருமணமாகாத ஆண் பி.எம்.அனுர பண்டார (வ39) ஆகிய இருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், உயிரிழந்துள்ள இருவருக்கும் தகாத உறுவு இருந்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில் இவ் இருவருக்குமிடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்கு தெரிய வந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி குறித்த நபருடன் சென்றுள்ள நிலையில் இவ் இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்