அமைச்சர் மீது அதிர்ச்சிக் குற்றச்சாட்டுக்கள்: சீ நோர் நிறுவன தலைவர் பதவிவிலகினார்!

Date:

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவின் மரண அச்சுறுத்தல் காரணமாக தனது கடமைகளை தொடர முடியாது என ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்ததையடுத்து, சீ நோர் நிறுவன தலைவர் டொக்டர் துலான் ஹெட்டியாராச்சி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தம்மை அச்சுறுத்தி இலஞ்சம் கேட்டு வருவதாகவும் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு வழிகளில் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் கலாநிதி துலான் ஹெட்டியாராச்சி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் சீ நோர் பவுண்டேஷன் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியதாகவும், அதன் தலைவராக ஹெட்டியாராச்சி பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், அந்த நிறுவனத்திற்கு இருபது புதிய ஊழியர்களை பியல் நிஷாந்த நியமித்ததாகவும் ஹெட்டியாராச்சி அனுப்பிய எழுத்துமூல முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் தனது தொகுதி வாக்காளர்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்குமாறு கேட்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் பொருட்களை வாங்குவதற்கு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் ஹெட்டியாராச்சி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஊழியர்களுக்கான சம்பளத்தை அமைச்சில் இருந்து வழங்குமாறு தமக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த அச்சுறுத்தல்களால் தாம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தனது கடமைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் துலான் ஹெட்டியாராச்சி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்