அனுராதபுரம், திரப்பனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் லஹிரு திரிமான்ன காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (14ஆம் திகதி) காலை 07.45 மணியளவில் திரிமன்ன நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த மேலும் மூன்று பேர், லொறியின் சாரதி மற்றும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அனுராதபுரம் – திரப்பனை வீதியில் 117 வது மைல்கல்லுக்கு அருகில் திரிமான்ன பயணித்த கார் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த லஹிரு திரிமான்ன சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.