ரம்பேவ நகரில் பாதசாரிகளை ஜீப் வண்டியொன்று மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (08) ரம்பேவ கல்லூரி விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அது முடிந்து வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்த குழுவினர், இன்று (09) அதிகாலை 02.00 மணியளவில் ரம்பேவ – அநுராதபுரம் வீதியில் ரம்பேவ நகரில் இருந்து அநுராதபுரம் நோக்கி 500 மீற்றர் தொலைவில் விபத்துக்குள்ளாகினர்.
ஜீப் வண்டியொன்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.
மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் வீதியில் நடந்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின்னர், இந்த ஐந்து பேரும் மிஹிந்தலை ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய இரு சிறுமிகளும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த மூவரும் 21, 19 மற்றும் 14 வயதுடையவர்கள்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் ரம்பேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




