கொடூர தந்தையிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு மகள்கள்!

Date:

தந்தையின் துன்புறுத்தல் காரணமாக இரண்டு பாடசாலை மாணவிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை தோட்டத்தில் வசிக்கும் 16 மற்றும் 14 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளின் தாயார் கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும், பாடசாலை மாணவிகள் இருவரும் அவர்களின் பாட்டியின் பராமரிப்பில் உள்ளதாகவும் திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். .

தந்தை தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து பாட்டியையும், இருவரையும் திட்டி தாக்குவதாகவும், அந்த நிலை காரணமாக வீட்டில் மிகுந்த அச்சத்துடன் இருப்பதாகவும் பாடசாலை மாணவிகள் இருவரும் திம்புல பத்தனை பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

தந்தையினால் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் திம்புல பத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் தோட்டத்திற்கு சென்று பாட்டியுடன் இரு மாணவர்களையும் (08) பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இரு மாணவிகளையும் டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறப்பட்ட பின்னர் இரு மாணவிகளையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்