ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள், எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.




