தனது மகனின் 32 வயதான மனைவியை பகிர்ந்து கொள்ள விரும்பாததால், மகனை வெட்டிக் கொன்ற குற்றச்சாட்டில் முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய தந்தையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (11) உத்தரவிட்டுள்ளார்.
அம்பத்தளை அங்கொட பகுதியைச் சேர்ந்த மகுல பபிலகே ஜயசிங்க என்ற நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய சந்திரகீர்த்தி முத்துக்குமாரன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தந்தையான சந்தேக நபர் நுகேகொட கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் உயிரிழந்தவரின் முதல் மனைவியான 32 வயதுடைய பெண்ணுடன் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதாகவும், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக முல்லேரிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் அம்பத்தளை பகுதியில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகநபர், கொலை செய்யப்பட்ட மகன், அவரது மனைவி மற்றும் ஆண் குழந்தையொருவர் வசித்து வந்துள்ளதாக முல்லேரிய பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
தனது முதல் மனைவியை கைவிட்டு, வேறொரு பெண்ணுடன் காதல் கொண்டு – குற்றம் நடந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
எனினும், தமக்கும் இறந்தவருக்கும் பிறந்த பத்து வயது மகளை விட்டுவிட்டு அந்த பெண் வேறு ஆணுடன் வெளிநாடு சென்றுள்ளார்.
இதனையடுத்து, சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட தனது மனைவியைச் சந்திக்கச் சென்ற இறந்தவர், மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு அழைத்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தன்று அம்பத்தளை வீட்டுக்கு வருவதற்கு உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவி தயாராக இருந்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தேகநபரின் தந்தை கொலையை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இறந்தவர் பெரகசந்தியா பகுதிக்கு சென்று கூரிய வாள் ஒன்றை 1800 ரூபா கொடுத்து வாங்கி வந்ததாகவும், யாரேனும் தன்னுடனோ தனது முன்னாள் மனைவியுடனோ தகராறு செய்தால் வெட்டிக் கொன்றுவிடுலேன் என குறிப்பிட்டதாகவும் தந்தை தெரிவித்துள்ளார்.
தந்தையும், மகனும் ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ளனர். போதையின் உச்சியில் மகன் படுத்திருந்த போது, அந் வளை எடுத்து மகனின் கழுத்தை வெட்டி, கொன்றுள்ளார்.
பின்னர் வீட்டை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு வந்து விட்டார். மறுநாள் எதுவும் நடவாதது போல சென்று, மகனை காணவில்லையென குறிப்பிட்டார். பின்னர் மற்றவர்களுடன் இணைந்து ஏணி வைத்து வீட்டுக்குள் எட்டிப்பார்த்து, மகன் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார் என கதறியுள்ளார்.
கொலையை செய்தது வேறு நபர் என திசை திருப்ப இந்த நாடகத்தை ஆடியுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவரின் பத்து வயது மகளை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்குமாறு கோரி முல்லேரிய பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் திருமதி தரங்கா மஹவத்த முன்னிலையில் நேற்று (12) மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன்படி சிறுமியை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது




