இளைஞன் மாயம்!

Date:

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்