25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

பெரும் தொற்று காரணமாக மரணம் அடைந்த தாய்;உடலை அடக்கம் செய்ய உதவி கிடைக்காமல் அல்லாடும் மகன்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா. அவருடைய மகன் கிரிதர். கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சுப்பம்மா சாய் நகர் காலனியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவருடைய மகனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் வெளிப்பட துவங்கின. எனவே கிரிதர் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் உடல்நிலை மோசமடைந்து சுப்பம்மா மரணமடைந்தார். வீட்டில் இருந்து வெளியே வர இயலாத நிலையிலிருக்கும் கிரிதர் உறவினர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு தன்னுடைய தாயின் மரணம் பற்றி தகவல் அளித்து உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவர் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. அதேபோல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. எனவே நேற்று இரவு முதல் தற்போது வரை தன்னுடைய தாயின் உடலை அடக்கம் செய்ய அரசிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் என்று வீட்டிற்குள்ளேயே அவருடைய உடலை வைத்து கொண்டு மகன் கிரிதர் காத்து கிடக்கிறார்.

கொரோனா பெரும் தொற்று மனிதர்களை மட்டுமல்லாமல் மனிதனிடம் காணப்படும் மனிதநேயத்தையும் மரணிக்கச் செய்து விட்டது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment