வடக்கு சுற்றுலா வரைபடத்தில் வெளிப்பிரதேச பௌத்த வழிபாட்டிடங்கள்: சுட்டிக்காட்டும் சீ.வீ.கே!

Date:

வடமாகாண சுற்றுலா வழிகாட்டியில் வடக்கிற்கு வெளியேயுள்ள பௌத்த வழிபாட்டிடங்களை இணைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராயுமாறு வடக்கு ஆளுனரிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளார் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

வடக்கு சுற்றுலா வழிகாட்டியில் வடக்கிற்கு வெளியிலுள்ள பௌத்த வழிபாட்டிடங்களை இணைத்து, வடக்கை பௌத்த மயமாக்கும் நடவடிக்கையா என எழுந்துள்ள விமர்சனங்களை தொடர்ந்து,  வடக்கு அவைத்தலைவர் இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டிடங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கிலுள்ள சைவ, கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் விடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு சுற்றுலா பணியக தலைவரை வடக்கை சேராத சிங்களவர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்