Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலையில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) விளையாட்டு ஆரம்பம் (VIDEO)

திருகோணமலை, சம்பூரில் இன்று (6) ஏறுதழுவும் (ஜல்லிக்கட்டு) வீர விளையாட்டு இடம்பெறுகிறது.

தென்னிந்தியாவின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், இலங்கையில் நடைமுறையில் இல்லை. எனினும், இம்முறை முதல்முதலாக சம்பூரில் நடைபெறுகிறது.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தென்னிந்தியாவில் தனது பூர்வீக பிரதேசத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் செந்தில் தொண்டமான், தென்னிந்திய ஜல்லிக்கப்பட்டு போட்டிகளில் தனது காளைகளை களமிறக்குவதுடன், அதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுனராக பதவிவகிக்கும் அவர், சம்பூரிலும் ஜல்லிக்கப்பட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

சம்பூர் மகாவித்தியாலயத்தில் இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் 200 வரையான காளைகள் பங்கேற்கின்றன.

இதேவேளை, இலங்கை தமிழ் மக்கள் தமது பாரம்பரிய அடையாளங்களை மறந்து, தென்னிந்திய மாயவலைக்குள் சிக்குகிறார்கள் என்ற குரல்கள் பரவலடைந்துள்ள காலகட்டத்தில் இந்த நிகழ்வு நடப்பது, கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment