24.5 C
Jaffna
January 12, 2025
Pagetamil
உலகம்

இன்குபேட்டரில் பாலன் இயேசு: பெத்தலகேம் தேவாலயத்தில் காசா துயரத்தை வெளிப்படுத்தும் கலைப்படைப்பு!

காசாவில் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என வகைப்படுத்தும் விதமாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் பாலஸ்தீன குழந்தைகள் இறப்பது குறித்து ஆழ்ந்த வருத்தமும் கவலையும் கொண்ட பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டார்.

குழந்தை இயேசுவை இன்குபேட்டரில் வைத்து உருவாக்கிய அவரது படைப்பு, பெத்தலகேம் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இயேசு பெத்தலகேமில் பிறந்தார். பெத்லகேம் இன்று பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரையில் உள்ளது. காசா பகுதியை மட்டுமே பாலஸ்தீனியர்களுக்காக இஸ்ரேல் ஒதுக்கியுள்ளது.

இன்று, காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.

காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து காசா மருத்துவமனைகளும் தாக்குதல்களால் முடங்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தன. மருத்துவமனைகளில் மின்சாரம், மருந்தில்லாமல் குழந்தைகள் உயிரிழந்தன.

வான்வழித் தாக்குதல்களுக்கு நடுவே, மருத்துவமனைகளில் குறைப்பிரசவமான குழந்தைகள் இன்குபேட்டர்களில் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கக எகிப்தில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

ராணா பிஷாரா, தனது கலைப்படைப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இன்று குழந்தை இயேசு பிறந்தால், அவர் ஒரு போர் மோதலின் நடுவில் பிறப்பார் என்று கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில் பனிப்புயல் – 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

Pagetamil

ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள், போயிங் மில்லியன் டொலர் நன்கொடை

east tamil

நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு!

Pagetamil

நியூயோர்க்கில் பெரும் தீ – 7 பேர் காயம், உயிர்காக்கும் போராட்டத்தில் 200 வீரர்கள்

east tamil

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவு: உரையை வாசித்த உதவியாளர்

east tamil

Leave a Comment