யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கைதியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (23) இரவு 7 மணியளவில், இரண்டு கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, மோதலில் ஈடுபட்டனர்.
இதில் சுன்னாகத்தை சேர்ந்த ஜெ.நிக்சன் (30) என்பவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.




