பிறந்ததும் கொன்று புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிசுவொன்றின் சடலம் தம்புத்கேகம, தேக்கவத்த பிரதேசத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையை பெற்றெடுத்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவரைப் பிரிந்து தனிமையில் வாழும் இந்தப் பெண், கலாடிவுல்வ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுடன் கொண்டிருந்த தகாத உறவின் காரணமாகவே இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




