தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல்!

Date:

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இன்று முதல் செலுத்தப்படவுள்ளது.

ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன, இரண்டாவது டோஸ் முதலில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்ட முன்னுரிமையின் வரிசையில் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று  ஜெயசுமன கூறினார்.

இலங்கையின் COVID-19 தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 29 இல் தொடங்கி, 925,242 நபர்களுக்கு முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.

இலங்கை 1.264 மில்லியன் டோஸ் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்டை இந்தியாவில் இருந்து மூன்று தனித்தனியான சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்தது.

தற்போது, 338,758 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்