காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் விடுத்த வேண்டுகோளின் பேரில் இத்துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிரதேச சபை ஊழியர்களினால் வடிகான்களில் தேங்கியுள்ள குப்பைகள், மண் மற்றும் நீரோட்டத்திற்கு இடையூறாக காணப்படும் கழிவுகள் என்பன அகற்றப்பட்டு வருகின்றன.
மழைக்காலங்களில் வடிகான்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு, மழைக்காலத்திற்கு முன்னதாகவே வடிகான்களை துப்புரவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாளிகைக்காடு உள்ளிட்ட காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் சுகாதாரச் சூழலை உறுதி செய்வதற்கும் இவ்வாறான துப்புரவுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்தார்.




