மாநாடு படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், சிம்பு ஒரே ஷாட்டில் தன்னை கொன்றுவிட்டதாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சிம்பு. அண்மையில், இவரது நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, பிரேம் ஜி அமரன்,
ரவிகாந்த், கருணாகரன், எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னே போப் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மாநாடு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், மாநாடு படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே ஒரு ஷாட்டில் சிம்பு தன்னை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இருக்கும் மாநாடு ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.