சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டு அவரை தாயாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட 14 வயது 07 மாத வயதுடைய சிறுமி, குழந்தை பிரசவித்துள்ளார்.
அதன்படி புத்தளம் வைத்தியசாலை பொலிஸாரால் இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் தன்னை திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் அவர்களது திருமணச் சான்றிதழ் மற்றும் சிறுமியான மனைவியின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.