பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற மோட்டார் வண்டியால் இடித்து தள்ளப்பட்டு ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கெபித்திகொல்லாவ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று (3) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் சுனில் சந்திரசிறி மிஹிந்தலை நாமல்வெவ பிரதேசத்தில் வசிப்பவர் என மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி அனுராதபுரம்-திருகோணமலை ஏ12 நெடுஞ்சாலையில் வேலங்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் மோதப்பட்டு, மோட்டர் சைக்கிளில் பயணித்த ஐ.பி.சந்திரசிறி கீழே விழுந்து காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
பொலிஸ் பொறுப்பதிகாரியை இடித்த விபத்திற்கு காரணமான அம்பன்பொல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




