25.9 C
Jaffna
December 13, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

யார் இந்த ஹமாஸ் போராளிகள்?: உருவாக்கமும், பின்னணியும்!

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் திகைப்பூட்டும் தாக்குதல் நடத்தியதன் மூலம், உலக அரங்கில் மீண்டும் ஹமாஸின் பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஹமாஸின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது. பதிலடியாக. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் வான், செல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

400 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த மோதலின் மையமான ஹமாஸ் அமைப்பு பற்றிய சில சுருக்கமான தகவல்கள் இங்கே இணைக்கப்படுகிறது.

ஹமாஸ் குழு என்றால் என்ன?

ஹமாஸ் என்பது இஸ்லாமிய ஆயுத போராட்ட இயக்கமாகும். ஹமாஸ் என்பதற்கு அரபு மொழியில் “ஆர்வம்” என்று பொருள்.

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 365 சதுர கிமீ (141 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் காசா பகுதி இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (பிஎல்ஓ) தலைவரான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளுக்கு எதிரான குறுகிய போருக்குப் பிறகு 2007 முதல் காஸா பகுதியில் ஹமாஸ் அதிகாரத்தில் உள்ளது.

ஹமாஸின் தோற்றம்

ஹமாஸ் இயக்கம் 1987 இல் காஸாவில் ஒரு இமாம், ஷேக் அகமது யாசின் மற்றும் அவரது உதவியாளர் அப்துல் அஜிஸ் அல்-ரான்டிசி ஆகியோரால் நிறுவப்பட்டது. பாலஸ்தீனிய பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிரான முதல் இன்டிபாடா எழுச்சியின் தொடக்கத்திற்குப் பிறகு ஹமாஸ் உருவானது.

இந்த இயக்கம் எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவத்தின் கிளையாகத் தொடங்கியது. வரலாற்று ரீதியான பாலஸ்தீனத்தை விடுவிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடர இஸ் அல்-தின் அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் என்ற இராணுவப் பிரிவை உருவாக்கியது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு சமூக நலத் திட்டங்களையும் வழங்கியது.

1948ஆம் ஆண்டு ஐநா சபையினால் பிரிக்கப்பட்ட நில எல்லைகளை இஸ்ரேல் பின்னர் கைப்பற்றிய போதும், 1967 ஆம் ஆண்டின் எல்லைகளைக் கொண்ட பாலஸ்தீன அரசை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது

ஹமாஸின் கொள்கைகள் என்ன?

பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேல் தேசத்தை அங்கீகரித்தது. ஆனால், ஹமாஸ் அதை அங்கீகரிக்கவில்லை. அத்துன், 1967 எல்லையில் பாலஸ்தீனிய அரசை ஏற்றுக்கொள்கிறது.

“சமீபத்திய அழுத்தங்கள் எதுவாக இருந்தாலும், எவ்வளவு காலம் ஆக்கிரமித்தாலும், பாலஸ்தீன சொந்த மண்ணின் ஒரு அங்குலத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று ஹமாஸின் தலைவரான காலித் மெஷால் 2017 இல் கூறினார்.

1990களின் நடுப்பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் பேச்சுவார்த்தை, ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களை ஹமாஸ் கடுமையாக எதிர்க்கிறது.

அதன் சொந்த எல்லைக்குள் பாலஸ்தீன அரசை நிறுவுவததே தமத நோக்கம் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலும் இஸ்ரேலிலும் இஸ்ரேலிய வீரர்கள், குடியேற்றவாசிகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் இந்த நோக்கத்தை அது தொடர்கிறது.

ஹமாஸ் அமைப்பு முழுவதுமாக அல்லது சில சந்தர்ப்பங்களில் அதன் இராணுவப் பிரிவு இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, எகிப்து மற்றும் ஜப்பானால் “பயங்கரவாத” அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஹமாஸின் ஆதரவாளர்கள் யார்?

ஹமாஸ் என்பது ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவை உள்ளடக்கிய ஒரு பிராந்திய கூட்டணியின் ஒரு பகுதியாகும், இது மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் மீதான அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கிறது.

இப்பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகியவை பெரும்பாலும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளன. காசாவில் உள்ள பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் கூட்டு நடவடிக்கை அறையின் மிக முக்கியமான உறுப்பினர்களாகும்.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்லாமிய ஜிஹாத் மீது ஹமாஸ் அழுத்தம் கொடுத்ததால் இரு குழுக்களுக்கு இடையேயான உறவு பதட்டமாக உள்ளது.

இஸ்ரேல் மீதான சனிக்கிழமை தாக்குதலைத் தூண்டியது எது?

பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காலித் கடோமி கூறினார்.

“அல்-அக்ஸா (மசூதி) போன்ற நமது புனிதத் தலங்களான பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான காசாவில் அட்டூழியங்களை சர்வதேச சமூகம் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விஷயங்கள் அனைத்தும் இந்த போரைத் தொடங்குவதற்குக் காரணம், ”என்று அவர் கூறினார்.

ஹமாஸ் மற்ற குழுக்களையும் போராட்டத்தில் சேர அழைப்பு விடுத்தது, சனிக்கிழமை தாக்குதல்கள் ஆரம்பம் என்று கூறினர்.

பொதுமக்களை குறிவைக்கிறதா ஹமாஸ்?

ஹமாஸின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒசாமா ஹம்தான் கூறுகையில், தாம் பொதுமக்களை தாக்குவதில்லையென குறிப்பிட்டார்.

அம்னஸ்டி இன்டர்நஷனல் போன்ற மனித உரிமைகள் குழுக்களும் இஸ்ரேலிய பொதுமக்கள் ஹமாஸால் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் ஹம்தான், சட்டவிரோதக் குடியேற்றங்களில் வசிக்கும் குடியேற்றக்காரர்களை மட்டுமே தாம் தாக்குவதாக குறிப்பிட்டார். அவர்களை அவர் முறையான இலக்குகள் என்று விவரித்தார்.

“குடியேறுபவர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையில் நீங்கள் வேறுபாடுகளை புரிய வேண்டும். குடியேறியவர்கள் பாலஸ்தீனியர்களைத் தாக்கினர்,” என்று  கூறினார்.

“நாங்கள் வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைக்கவில்லை. குடியேறியவர்கள் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதி என்றும் ஆயுதமேந்திய இஸ்ரேலியப் படையின் ஒரு பகுதி என்றும் நாங்கள் அறிவித்துள்ளோம். அவர்கள் பொதுமக்கள் அல்ல” என்று அவர் மேலும் கூறினார்.

ஹமாஸால் எப்படி தாக்குதலை நடத்த முடிந்தது?

ஹமாஸ் தனது போராளிகள் பல இஸ்ரேலியர்களை சிறைபிடித்ததாகக் கூறியது. பல இஸ்ரேலிய இராணுவத்தினரையும், பொலிசாரையும் போராளிகள் இழுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியாகியது.

2006 ஆம் ஆண்டு ஹமாஸ்- மற்றும் ஏனைய போராளிகள் இஸ்ரேலுக்குள் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் சிப்பாய் கிலாட் ஷாலிட்டை பணயக்கைதியாக பிடித்தனர். ஹமாஸ் ஷாலித்தை ஐந்தாண்டுகள் சிறை வைத்திருந்தது. இறுதியில் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு, அவர் பரிமாற்றப்பட்டடார்.

இஸ்ரேலுக்குள் பறக்கும் பாராகிளைடர்களையும் ஹமாஸ் அனுப்பியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 1980 களின் பிற்பகுதியில் பாலஸ்தீனியப் போராளிகள் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்குள் ஹேங்-கிளைடர்களில் நுழைந்து ஆறு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சபாநாயகர் இராஜினாமா!

Pagetamil

ஜனாதிபதி அனுரவின் இந்திய பயண விபரம்!

Pagetamil

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

Leave a Comment