நேற்று (04) பிற்பகல் ஹப்புத்தளையில் உள்ள தனது வீட்டில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வு செய்த நபர் ஒருவர் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதான ஹப்புத்தளை ரயில் நிலைய வீதி இலக்கம் 66/01 இல் வசிக்கின்றார்.
இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபர் வீட்டில், தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட 2 மண்வெட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பூசணிக்காய்கள், பூக்கள், விளக்குகள், மெழுகு தீபங்கள், கறுப்புத் துணிகள், சாம்பிராணி மற்றும் பல பூஜைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.




