அன்ரிகளில் ஆசைப்பட்டால் இதுதான் கதி: 16 வயது மாணவன் கடத்தப்பட்டு அந்தரங்க உறுப்பில் மிளகாய்த்தூள் தூவப்பட்டது!

Date:

குடும்பப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக தெரிவித்து, 16 வயது மாணவன் வாகனத்தில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

தெவல்பொல கனிஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் கடந்த 19ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தனது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போது கார் ஒன்று வந்து அவரை கடத்தி சென்றுள்ளது.

பெண்ணின் கணவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் காரில் வந்து மாணவனை கடத்திச் சென்றனர்.

அவர்கள் மாணவனை முதலில் கனிஹிமுல்ல பிரதேசத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தி வரப்பட்ட மாணவன் தான் தொல்லை கொடுத்தாரா என, கணவன் தனது மனைவியிடம் வினவியுள்ளார். மனைவி மாணவனை அடையாளம் காட்டியதையடுத்து, மாணவன் கொடூரமாக தாக்கப்பட்டார்.

மாணவன் பொல்லால் தாக்கப்பட்டு, ஆடைகளை களைந்து, அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள் தூவப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்...

தீயில் சங்கமமானார் எம்.கே.சிவாஜிலிங்கம்!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்