வவுனியா இரட்டைபெரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 9 வயது சிறுமி ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுகாலை முச்சக்கர வண்டியொன்றில் சிறுமி தனது தாயுடன் சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து விட்டு கல்குண்ணாமடுப் பகுதியில் உள்ள அவரது வீடு நோக்கி சென்றுள்ளனர்.
இதன்போது எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளர்.
கல்குண்ணா மடுப்பகுதியை சேர்ந்த ஆகாசா ரசினி என்ற 9 வயது சிறுமியே சாவடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஈரப்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1