நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வாவுக்கு ‘ரெட் கார்ட்’: தயாரிப்பாளர் சங்கம் முடிவு

Date:

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்ட் விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று (13) நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன.

இந்த நிலையில் கூட்டத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்ட் விதிக்க முடிவு செய்யப்பட்டது. நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார்கள் அளித்தும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் விதிக்க முடிவு செய்யப்பட்டது.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.

நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிப்ம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்ட் விதிக்கப்படுகிறது.

மேலும் தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா, முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கும் ரெட் கார்ட் வழங்குவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்