இலங்கையில் மேலும் 4 கொவிட்-19 தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (23) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மரணங்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
கொழும்பு 02 (கொம்பனித்தெரு/ யூனியன் பிளேஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த, வெளிநாட்டவரான 46 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று 24ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நினியாவுடன், சுவாச மற்றும் இருதய செயற்பாடு செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான ஆண் ஒருவர், கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த 22ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் இரண்டாம் நிலை பக்டீரியா தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான ஆண் ஒருவர், குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (24) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 04 (பம்பலபிட்டி) பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள சிகிச்சை நிலையமொன்றில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (23) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயுடன் ஏற்பட்ட அவையவங்கள் செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.




