ஜெயிலர் மெகா ஹிட்: ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்!

Date:

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அன்புப் பரிசாக வழங்கி உள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியாகி உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது திரை அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதுவரை இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். இது சர்ப்ரைஸ் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதன் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்