நான் யார்?: சிறிதரனின் கேள்வியையடுத்து ரணில் கேட்ட சுவாரஸ்ய கேள்வி!

Date:

வடக்கு கிழக்கு மக்கள் அதிக துயரப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். நான் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமென உண்மையாக விரும்புகிறேன். சிறிதரன் என்னை சிங்கள இனவாதி என்கிறார். அத்துரலிய ரத்ன தேரர் என்னை தமிழ் மக்களின் ஆதரவாளர் என்கிறார். நான் யார்? என நாடாளுமன்றத்தில் சுவாரஸ்யமாக கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

இன்று நாடாளுமன்றத்தில், 13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றினார்.

இதன்பின்னர் உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், 13வது திருத்த விவகாரத்தை குழப்பமடைய வைப்பதில் ஜனாதிபதி வெற்றிபெற்றுள்ளார். இங்கு உரையாற்றியவர்களின் கருத்துக்களில் இருந்து அது தெரிகிறது. இனப்பிரச்சினை தீர வேண்டுமென எத்தனை சிங்கள தலைவர்கள் விரும்புகிறார்கள். 13வது திருத்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, ஜனாதிபதி குழப்பியுள்ளார். சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களிற்கு தீர்வு வழங்க மாட்டார்கள். தீர்வும் இல்லை, தேர்தலும் இல்லையென்றார்.

இதற்கு பதிலளித்த போதே, ஜனாதிபதி மேற்படி கேள்வியெழுப்பினார்.

spot_imgspot_img

More like this
Related

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று வங்கிக் கணக்கில் பணம் வைப்பு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நவம்பர் மாத அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு...

WWE வீரர் பிரான்சன் ரீட் காலமானார்

WWE நிறுவனம், அதன் சூப்பர் ஸ்டார் பிரான்சன் ரீட் (Bronson Reed)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்