‘ஜெயிலர்’ வெற்றி பெற கோயிலில் மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்!

Date:

‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சனம் செய்தும் ரஜினி ரசிகர்கள் வழிப்பட்டனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் படம் 10ஆம் திகதி தமிழகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்தப் படத்தைப் பார்க்க ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர்.

மதுரையில் சாதாரணமாகவே ரஜினியை அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது படம் வெளியாவதால் நகர் முழுவதும் ஜெயிலர் படத்தை வாழ்த்தியும், அந்த படம் வெற்றி பெற விரும்பியும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

அதோடு ஜெயிலர் படம் வெற்றிப்பெற மதுரையில் உள்ள முக்கிய கோயில்களில் ரஜினி ரசிகர்கள் நேர்த்திக்கடனும், சிறப்புப் பூஜைகளும் செய்து வருகின்றனர்.

நேற்று மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள வெயில் காலத்து அம்மன் கோயிலில் ரஜினி ரசிகர் சரவணன் தலைமையில் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அவர்கள் அங்கபிரதட்சனம் செய்தும் வழிபட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள்...

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்