இன்று போயா விடுமுறையாக இருந்தாலும் மக்கள் வங்கியின் அனைத்து கிளைகளும் திறந்திருக்கும்.
அஸ்வெசும நன்மைக் கொடுப்பனவுகளுக்குத் தகுதியுடையவர்கள் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக அனைத்துக் கிளைகளும் இன்று திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
எனவே நன்மைக் கொடுப்பனவுகளுக்குத் தகுதியுடையவர்கள் ஆனால் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அருகிலுள்ள கிளைக்குச் சென்று அரசாங்கத்திடமிருந்து கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு கணக்கைத் திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சேமசிங்க கேட்டுக் கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1