‘குடிப்பழக்கம் மட்டும் இல்லையெனில் எங்கேயோ இருந்திருப்பேன்’: ரஜினிகாந்த்

Date:

குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன் என்று ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28) சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: “குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் குடிப்பதால் அம்மா, மனைவி உட்பட குடும்பத்தில் இருக்கும் அனைவருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நாம் நம்முடைய வேலைய பார்த்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்” என்று ரஜினி பேசினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்